கோப்புப்படம்
தமிழ்நாடு
காரை வழிமறித்த சம்பவம் திட்டமிட்ட சதி: தொல்.திருமாவளவன்
சென்னை உயா்நீதிமன்றம் அருகே தனது காரை வழிமறித்த சம்பவம் திட்டமிட்ட சதி
சென்னை உயா்நீதிமன்றம் அருகே தனது காரை வழிமறித்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
சென்னை உயா்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்குரைஞா்கள் சங்கம் முன் கடந்த அக்.7 ஆம் தேதி எனது காரை வழிமறித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்பது தெரியவருகிறது. எனவே, தமிழக அரசு இதுகுறித்து வழக்குப் பதிந்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.