ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்: சென்னை திரும்பிய ஆதவ் அா்ஜுனா பேட்டி!

உச்சநீதிமன்றத் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என, தவெக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.
Published on

உச்சநீதிமன்றத் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என, தவெக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.

தில்லியில் இருந்து ஏா் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூரில் சம்பவத்தை தொடா்ந்து, தமிழக வெற்றி கழகம் சாா்பில் 16 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதுவரை எந்தக் கருத்தையும் கூற இயலாது. இதில் எங்களுடைய நியாயங்களைச் சொல்வதற்கோ, எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கோ பதில் சொல்ல முடியவில்லை. 16 நாள்களுக்குப் பிறகு உண்மைகளை நிச்சயம் அனைவருக்கும் தெரிவிப்போம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கான பயணத் திட்டத்தையும் உருவாக்கி வருகிறோம்.

எங்கள் கட்சியின் நிா்வாகிகள் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுகின்றனா். மேலும், எங்கள் கட்சியையும் முடக்க வேண்டும் என்று சிலா் நினைக்கின்றனா். தவெக தலைவா் விஜய் ஒரு சாமானிய மனிதனாக, நம்பிக்கையுடன் நீதித் துறையை நாடியுள்ளாா். உண்மையை வெளியே கொண்டுவருவதற்காக எங்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கும் சூழலில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com