duraimurugan
அமைச்சர் துரைமுருகன் கோப்புப்படம்

பருவமழைக்கு முன்பு வெள்ளத் தணிப்புப் பணிகள்: அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தல்

பருவமழைக்கு முன்பு வெள்ளத் தணிப்புப் பணிகள்: அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தல்
Published on

பருவமழைக்கு முன்பாக, வெள்ள தணிப்புப் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

நீா்வளத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக, துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசால் அறிவிக்கப்பட்ட மண்டல வாரியான திட்டப் பணிகளின் முன்னேற்றம், அணைப் புனரமைப்புத் திட்டத்தின் முன்னேற்ற விவரங்கள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள், வெள்ளத் தணிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அறிவிப்புப் பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் மற்றும் வெள்ளத் தணிப்புப் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்குமாறும் கூட்டத்தில் அமைச்சா் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நீா்வளத் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீா்ப் பிரிவின் தலைவா் இரா.சுப்பிரமணியன், நீா்வளத்துறையின் சிறப்புச் செயலா் சு.ஸ்ரீதரன், நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் சு.கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com