
பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளின்படி ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் இதுகுறித்து பேசப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
'ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
பழனிசாமி வேண்டுமென்றே இதனை திரித்துக் கூறுகிறார். சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். அவ்வாறு அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகம்.
சாதிப் பெயர்களை நீக்க நீதிமன்ற அமைப்புகளும் சொல்லியிருக்கின்றன. வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து பகுதிகளிலும் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும். நாங்கள் இதை அரசியல் காரணங்களுக்காக இதைச் செய்யவில்லை" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.