
குஜராத்தின் துவாரகா நகரில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீஷ் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
குஜராத் மாநில பயணத்தின் மூன்றாவது மற்றும் இறுதி நாளில் குடியரசுத் தலைவர் முர்மு ஜூனாகத்திலிருந்து துவாரகாதீஷ் கோயிலுக்கு பயணம் மேற்கொண்டார்.
அவருடன் அவரது மகள் இதிஸ்ரீ முர்மு மற்றும் பிற பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
இந்திய மக்களின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்காக துவாரகாதீஷ் இறைவனிடம் முர்மு பிரார்த்தனை செய்ததாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாலை, அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபீடத்தின் 71ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு முர்மு தலைமை தாங்க உள்ளார்.
முன்னதாக நேற்று, ஜூனாகத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவிற்கு சென்ற அவர் சிங்கங்களை பார்வையிட்டார். பின்னர் சாசனில் உள்ள சித்தி பழங்குடி சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.