விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

ஒரு மாதத்திற்குள் டிஆர்பி மூலம் 2,200 நிரந்தர பேராசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்
Published on
Updated on
1 min read

ஒரு மாதத்திற்குள் டிஆர்பி மூலம் 2,200 நிரந்தர பேராசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கு இடையே தஞ்சையில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், முதல்வரின் சிறப்பான ஆட்சியால் தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்குகிறது.

தமிழ் நாட்டில் கல்வி, சுகாதாரம், தொழில்துறை எப்படி முதன்மையானதாக விளங்குகிறதோ அதேபோல் விளையாட்டுத் துறையும் முதன்மையாக திகழ்கிறது.

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

விளையாட்டுத்துறையில் இந்திய அளவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. துணை முதுல்வர் வசம் விளையாட்டுத் துறை உள்ளதால் அவர் படிப்போடு விளையாட்டில் அனைத்து மாணவ- மாணவிகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

கிராம மக்கள், அடிதட்டு மக்களும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகின்றனர் என்றால் அவரது சீரிய முயற்சி காரணமாகும்.

கோவை மேம்பாலத்திற்கு தலைசிறந்த விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு பெயரை சூட்டி முதல்வர் சிறப்பு செய்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை பெருமைப்படுத்தாமல் கொச்சைப் படுத்துகின்றனர். ஒரு சிலரை ஜாதி பெயரை கூறினால் தான் அடையாளம் தெரியும். அதனால் மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர்தான் பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் 34 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. நான் பொறுப்பேற்ற 8 மாதத்திற்குள் 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 8 புதிய பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கு தேவையான 2,700 நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் ஒரு மாதத்திற்குள் டிஆர்பி தேர்வு மூலம் 2,200 நிரந்தர பேராசிரியர்களை எடுப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

Higher Education Minister Govi Chezhiaan has said that an examination will be conducted to appoint 2,200 permanent professors through the TRB examination within a month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com