மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!
திருக்குவளை: கீழையூரில் மின்னல் தாக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது சிறுவன் பலியானார்.
நாகை மாவட்டத்திற்கு உள்பட்ட கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று(அக். 12) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இந்த நிலையில், கீழையூர் கீழத் தெருவை சேர்ந்த தீபராஜ் என்ற 13 வயதான சிறுவன், சனிக்கிழமை மாலை வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென இடி, மின்னல் தாக்கி மயங்கி விழுந்தார்.
உடனே உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மின்னல் தாக்கிய தாக்கம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் திருப்பூண்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
A 13-year-old boy who was admitted to the intensive care unit after being struck by lightning in Keezhayur has died.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

