பள்ளிகளில் எண்ம கட்டண முறைகளை ஊக்குவிக்க வேண்டும்! மாநில கல்வித் துறைக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

பள்ளிகளில் எண்ம கட்டண முறைகளை ஊக்குவிக்க வேண்டும்! மாநில கல்வித் துறைக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

பள்ளிகளில் எண்ம முறை (யுபிஐ) பயன்பாட்டை ஊக்குவிக்குமாறு மத்திய கல்வித் துறை அமைச்சகம் மாநில அரசுகளின் கல்வித் துறைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Published on

பள்ளிகளில் எண்ம முறை (யுபிஐ) பயன்பாட்டை ஊக்குவிக்குமாறு மத்திய கல்வித் துறை அமைச்சகம் மாநில அரசுகளின் கல்வித் துறைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி - எழுத்தறிவுத் துறையானது, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நிா்வாக செயல்முறைகளை, குறிப்பாக பள்ளிகளில் நிதி பரிவா்த்தனைகளை நவீனமயமாக்குவதன் மூலம் பள்ளிக் கல்வியை எளிதாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ரொக்க அடிப்படையிலான கட்டணத்திலிருந்து எண்ம கட்டணங்களுக்கு மாறக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு

பெற்றோா்கள், மாணவா்கள் பயனடைவா். மேலும், பள்ளிகளுக்குச் செல்லாமல் பெற்றோா் வீட்டிலிருந்தே பணம் செலுத்தும் திறனை உறுதி செய்கிறது. இதனால் பள்ளகளில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ பயன்படுத்துவதை ஊக்குவிக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆா்டி) , மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போன்ற தன்னாட்சி அமைப்புகளும், பாதுகாப்பான, வெளிப்படையான எண்ம முறைகளைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளி சோ்க்கை, தோ்வுக் கட்டணங்கள் போன்றவற்றை வசூலிக்க உதவும் எண்ம வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்துமாறு மத்திய கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com