
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக திரிசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதும், காவல்துறையினருடன், வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் இணைந்து, அணைப் பகுதி முழுவதும் சோதனை நடத்தினர்.
ஆனால், தீவிர சோதனைக்குப் பிறகும், அணையில் சந்தேகத்துக்கு இடமான எந்தப் பொருளும் கிடைக்கப்பெறாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்துள்ளது. எனினும், அணைப் பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, தமிழ்நாடு - கேரளம் என இரு மாநிலங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அதே வேளையில், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாட்டுக்கும், அது அமைந்திருக்கும் கேரளத்துக்கும் இடையே சில மோதல்களுக்கும் காரணமாக உள்ளது.
இதையும் படிக்க... கல்வி உதவித் தொகை என்ற பெயரில் க்யூஆர் குறியீடு மோசடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.