ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15 ஆயிரம்  கோடி முதலீடு: 
முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
கோப்புப்படம்

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Published on

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 14 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். இதனை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதனிடையே, முதலீடுகளை உறுதி செய்யும் வகையில் ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபா்ட் யூ, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தாா். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு முதல்வா் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com