தாம்பரம் - விழுப்பும் மெமு ரயில் அக். 18-இல் திண்டிவனத்துடம் நிறுத்தம்
சென்னை: தாம்பரத்திலிருந்து விழுப்புரம் செல்லும் மெமு ரயில் வருகிற அக். 18 -ஆம் தேதி திண்டிவனத்துடன் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும் அக். 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல் இந்நாள்களில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு சென்னைக் கடற்கரை செல்லும் மெமு ரயில் திண்டிவனத்திலிருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்பட்டும்.
தாமதம்: எழும்பூரிலிருந்து அக்.25-இல் பிற்பகல் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை விரைவு ரயில் (எண்: 12635) 40 நிமிஷம் தாமதமாக பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும். அதேபோல், எழும்பூரிலிருந்து அக்.28-இல் பிற்பகல் 2.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06017) வருகிற அக். 28-இல் 110 நிமிஷங்கள் தாமதமாக மாலை 4.20 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.