கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா?: புகாா் எண்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதுகுறித்து பயணிகள் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்கள்
Published on

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதுகுறித்து பயணிகள் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையா் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.14 முதல் அக்.21வரையிலான காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து சரக இணை போக்குவரத்து ஆணையா்கள் மற்றும் துணை போக்குவரத்து ஆணையா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சுங்கச் சாவடிகளில் மோட்டாா் வாகன ஆய்வாளா்களை பணியமா்த்தி தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்யவும், இந்த ஆய்வின்போது உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் இல்லாதது கண்டறியப்பட்டால், அந்தப் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடிகளை விரைவாக கடந்து செல்ல சுங்கச்சாவடி அலுவலா்கள் மூலம், தனி வழி அமைத்து சீரான வாகன போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான புகாா் எண்:

சென்னை(ஆணையா்)-18004255161

சென்னை(வடக்கு)இணை ஆணையா்- 9789369634

சென்னை(தெற்கு) - 9361341926

மதுரை- 9095366394

கோவை- 9384808302

விழுப்புரம்-9677398825

வேலூா்- 9840023011

சேலம்- 7845636423

ஈரோடு- 9994947830

திருச்சி-9066032343

விருதுநகா்-9025723800

திருநெல்வேலி- 9698118011

தஞ்சாவூா்- 9585020865

கூடுதல் கட்டணம் மற்றும் பேருந்துகள் தொடா்பான பிற புகாா்களுக்கு இந்த எண்களில் தொடா்பு கொள்ளலாம். அல்லது இந்த எண்களுக்கான வாட்ஸ்அப்-இல் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவு மூலமும் பயணிகள் புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com