மருந்து தயாரிக்கப் பயன்படும் சேர்மங்களுக்கும் தரப் பரிசோதனை: தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

மருந்து தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் சேர்மங்களின் தரத்தை உறுதி செய்வது கட்டாயம் என நிறுவனங்களுக்கு இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

மருந்து தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் சேர்மங்களின் தரத்தை உறுதி செய்வது கட்டாயம் என நிறுவனங்களுக்கு இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ப்ரோபலின் கிளைகால் இல்லாத திரவ மருந்துகளைத் தயாரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதைத் தயாரிக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே, அங்கிருந்த மருந்துகளைப் பகுப்பாய்வு செய்ததில், அதில் டைஎத்திலீன் கிளைகால் என்ற ரசாயன நச்சு இருப்பது கண்டறியப்பட்டது. வழக்கமாக ரெசின், ஆயில், பெயிண்ட், மை தயாரிக்கும்போது அதை திரவமாக்கப் பயன்படுத்தப்படும் கரைப்பான் சேர்மம் அது. திரவ மருந்துகளில் ப்ரோபலின் கிளைகால் சேர்மம்தான் கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கோல்ட்ரிஃப் மருந்தில் அந்த டைஎத்திலீன் கிளைகால் சேர்மம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

நாடு முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜெயசீலன் சில அறிவுறுத்தல்களை மருந்து நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழக மருந்துகள் தரமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனால்தான் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வின்போது தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே தரமற்ற மருந்துகள் கண்டறியப்படும்.

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. மருந்து தயாரிப்பின்போது உரிய வழிகாட்டுதல்களையும், தரப் பரிசோதனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக, கரைப்பானாக பயன்படுத்தப்படும் சேர்மங்களின் தரத்தை உறுதி செய்த பிறகே அவற்றை மருந்தில் உபயோகப்படுத்த வேண்டும். ப்ரோபலின் கிளைகால் சேர்மத்தை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும்.

சிறிய அளவிலான மருந்து உற்பத்தியாளர்கள் அதை மொத்தமாக வாங்காமல், பொட்டலங்களைப் பிரித்து சில்லறையாக வாங்கும்போதுதான் கலப்படம் நேர்கிறது. அதைத் தவிர்க்க, பிற உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து மொத்தமாக வாங்கி பிரித்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான மருந்துகளைத் தயாரிப்பவர்கள் ப்ரோபலின் கிளைகால் இல்லாமல் மாற்று வழியில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com