
சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கும் மழை நாளை தீவிரமடையத் தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும். அக்டோபர் 15 - 18 முதல் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்.
கடலில் இருந்து மேகங்கள் நகர்வது ஒரு அழகான காட்சி. இன்று திடீர் மழையை அனுபவியுங்கள். சிறிய மேகங்கள்கூட 20-30 மிமீ மழையைப் பொழியும்.
தூத்துக்குடி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் வசிப்போர் இன்று முதல் அலுவலகத்திற்குச் செல்லும்போது குடை / ரெயின்கோட் எடுத்துச் செல்வது அவசியம்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒருநாளே இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற அக். 16 - 18 தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.