
டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடரும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) தலைமை அலுவலகம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதனடிப்படையில், ரூ. 1,000 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் வினோத் சந்திரன், அமலாக்கத் துறை மீதான இடைக்காலத் தடை தொடரும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஆர். கவாய், ``இது மாநிலத்தின் உரிமையை மீறுவதில்லையா? மாநிலம் விசாரிக்கவில்லை என்று சந்தேகம் வரும்போதெல்லாம் அங்கு செல்வீர்களா? போலீஸ் மீது சந்தேகம் வந்தாலும், நீங்கள் உள்ளே சென்று விடுவீர்களா? டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தனியாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வரும்நிலையில் நீங்கள் ஏன் உள்சென்றீர்கள்? மாநில அரசின் விசாரணையை பறிக்க முயல்கிறதா?’’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதையும் படிக்க: மேற்கு வங்கம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் வாக்குமூலம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.