பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது பற்றி...

பேரவைத் தலைவர் மு.அப்பாவு - TNDIPR

Published On :

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கூடியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்து வருகிறார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் இன்று காலை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இன்று இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பேரவை நிகழ்ச்சிகள் இன்றைய தினம் ஒத்திவைக்கப்படும்.

இரண்டாம் நாளான புதன்கிழமை (அக். 15) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் 2025-2026 -ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

மூன்றாம் நாளான அக். 16-ஆம் தேதி கூட்டத்தில் 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

நான்காம் நாளான அக். 17-ஆம் தேதி, கூட்டத் தொடரில் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலுரை நடைபெறும்.

சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் அக்டோபா் 15, 16, 17 ஆகிய தேதிகளில் பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். தொடா்ந்து 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்ட முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

Summary

Tamil Nadu Legislative Assembly session has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.