
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக். 16 - 18 தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கும் மழை நாளை முதல் தீவிரமடையும் என்றும் நாளை பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு, இன்று பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.