சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுதொடர்பாக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக். 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் சட்டப்பேரவை செயலகத்தில் கோரப்படும் தகவல்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏதுவாக இந்தத் துறையின் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு காலை 9.30 மணிக்கு கால தாமதமின்றி விடுப்பு ஏதும் எடுக்காமல் வருகை புரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.