
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 94-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ராமேசுவரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள அவரது தேசிய நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கலாம் குடும்பத்தினர் மலர் தூவி புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.
கலாம் பிறந்த நாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல, பாஜக மாவட்டத் தலைவர் கே. முரளிதரன், தென்னை வாரியத் தலைவர் சுப. நாகராஜன், பாஜக நகரத் தலைவர் மாரி, மண்டபம் ஒன்றியத் தலைவர் கதிரவன், அப்துல் கலாம் குடும்பத்தினர், நினைவிடப் பொறுப்பாளர் அன்பழகன், வட்டாட்சியர் அப்துல் ஜப்பார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து "எக்ஸ்' தளத்தில் முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
உயர்கல்விக்காக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாமுக்கு செலுத்தும் மிகச் சிறந்த நன்றிக்கடன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
அப்துல் கலாமின் 94-ஆவது பிறந்த நாளையொட்டி, ராமேசுவரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்திய மத்திய இணை அமைச்சர் எல். முருகன். (வலது) தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.