
சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்கள் வருகின்றன. சோதனையில் பெரும்பாலும் அது புரளி எனத் தெரிய வருகிறது.
நீதிமன்றங்கள், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர் தூதரகங்களில் வெடிகுண்டு இருப்பதாக டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து அனைத்து இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் அது புரளி என தெரிய வந்திருக்கிறது. தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலி வெடிகுண்டு மிரட்டல்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிவிட்டு அவர்கள் முகவரியை மாற்றிவிடுவதால் அதனைக் கண்டறிய நிபுணர்கள் சிரமப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.