
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்றிரவு முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கும் வகையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மழைநீர் தேங்கும் சாலைகள், சுரங்கப் பாதைகள், தெருக்கள் உள்ளிட்டவை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
தொலைபேசி, ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாட்டு அறையை இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தொலைபேசி மூலம் மக்களிடன் நேரடியாக உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.