
தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைச்சர் சிவசங்கர் பேசிய நிலையில், அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், பேரவையில் தரையில் அமர்ந்து தர்னாவிலும் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதனிடையே, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? இல்லையா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இருக்கையில் அமர்ந்து கேள்விகளை எழுப்புமாறு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.
இதனிடையே, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களை பேரவைத் தலைவர் அழைத்த நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிக்க: தூத்துக்குடி Vs கள்ளக்குறிச்சி! மு.க.ஸ்டாலின், இபிஎஸ் இடையே அனல்பறந்த விவாதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.