"மெகா' கூட்டணி அமைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவர்: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

"மெகா' கூட்டணி அமைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவர்: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

மெகா கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்தாலும் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவது உறுதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Published on

மெகா கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்தாலும் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவது உறுதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தர்னா செய்துவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைத்ததையும், உயர் அதிகாரிகள் அளித்த விளக்கத்தையும் விமர்சனம் செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

பேரவையில் எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் வந்துள்ளனர். தங்களது கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட அதிமுகவினரிடமிருந்து இப்படி போர்க்குரல் வருமா எனத் தெரியவில்லை.

கூட்டணிக்காகத்தான் அதிமுகவினர் இப்படி நாடகம் ஆடுகின்றனர். அவர்கள் நினைக்கும் கூட்டணி அமையலாம்; அமையாமல் போகலாம். ஆனால், எந்தக் கூட்டணி அமைந்தாலும், அவர்கள் எண்ணுகிற "மெகா' கூட்டணி அமைந்தாலும் எதிர்க்கட்சியினருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com