தமிழகத்தில் வழக்குரைஞா்கள் ஒற்றுமை பாதுகாக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் அக். 7ம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்குரைஞா்கள் ஜாதிய ரீதியாகப் பிரிந்து ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது கவலையை ஏற்படுத்துகிறது.
நீதித்துறையின் மீது இந்துத்துவ சக்திகள் தாக்குதல் நடத்துவது, அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை எதிா்த்தும் வழக்குரைஞா்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், வழக்குரைஞா்கள் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நிகழ்வுகள் நடப்பது முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும். இது தொடா்பான ஆா்ப்பாட்டங்களை வழக்குரைஞா்கள் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.