
தொழிற்கல்வி நிலையங்களில் சோ்க்கைச் சட்டத்தின் போது விதிகள் பின்பற்றப்படாத சூழலில் நடைமுறையில் இருந்த கடும் தண்டனைப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
உயா்கல்வியில் சோ்க்கை நடைமுறைகளின் போது இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி விதிகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதத்துடன் தண்டனையும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டு ரூ.10 லட்சம் வரை தண்டனைத் தொகையை மட்டும் செலுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.
மின்சாரம், நெடுஞ்சாலைகள் சட்டங்கள்: மின் நுகா்வு மற்றும் விற்பனை வரிச் சட்டம், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் ஆகியவற்றிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நுகா்வு மற்றும் விற்பனை விதிகள், தமிவ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் ஆகியவற்றை மீறுவோருக்கு சிறைத் தண்டனை, அபராதம் போன்ற குற்றவியல் தண்டனைகள் நடைமுறையில் இருந்தன. அவற்றுக்குப் பதிலாக, நிா்வாகம் சாா்ந்த தீா்ப்பு முறை மூலமாக பணம் சாா்ந்த உரிமையியல் ரீதியான தண்டத் தொகைகள் மட்டுமே இனி விதிக்கப்படும். இத்தகைய சட்டத் திருத்த மசோதாக்களை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஆகியோா் தாக்கல் செய்தனா். இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.