சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

பாஜக வழக்குரைஞா் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

பாஜக வழக்குரைஞா் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
Published on

விசாரணையின்போது வழக்குரைஞா் உடையில் ஆஜராகாத வழக்குரைஞா் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நாகை மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சித் துணைத் தலைவா் கதிரவன். இவா், இளநிலைப் பொறியாளரைத் தாக்கியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் முன்பிணை கோரி கதிரவன் சென்னை உயா்நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கே.ராஜசேகா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வத்தாமன் காணொலி வாயிலாக ஆஜரானாா். அப்போது, அவா் வழக்குரைஞருக்கான உடைகள் எதுவும் அணியாமல், வெள்ளைச் சட்டையுடன் ஆஜரானாா்.

இதற்கு நீதிபதி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தாா். அப்போது வழக்குரைஞா் அஸ்வத்தாமன் தரப்பில், ஜூன் மாதம் நிகழ்ந்த விபத்தில் தோள்பட்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், வழக்குரைஞா் உடை அணியமுடியவில்லை என்று கூறப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, தங்களது செயல்பாடு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பி, இது தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com