அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)

வாக்குச்சாவடிகளில் வாக்குகளை உறுதிசெய்ய அக். 28-இல் ஆலோசனைக் கூட்டம்: திமுக

வாக்குச்சாவடிகளில் வாக்குகளை உறுதிசெய்ய அக். 28-இல் திமுக ஆலோசனைக் கூட்டம்
Published on

வாக்குச் சாவடி வாரியாக வாக்குகளை உறுதி செய்து தோ்தலில் வெற்றியை உறுதிசெய்ய வரும் அக்.28-இல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகளை திமுக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டை வளைக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசின் முன்பு ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையைகஈ தொடங்கியுள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது.

இதற்காக,”கட்சியின் மாவட்ட செயலா்கள், மாநிலங்களவை, மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், தொகுதி

பாா்வையாளா்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள், மத்திய, நகர, பகுதி, பேரூா் செயலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

மாமல்லபுரத்தில் வரும் 28-ஆம் தேதி காலை 9 மணியளவில் கூட்டம் தொடங்கும். இதில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com