Anbumani
அன்புமணி (கோப்புப்படம்)

சட்டப்பேரவையில் தனது தரப்புக்கு அங்கீகாரம்: அன்புமணி வலியுறுத்தல்

தனது தரப்பு எம்எல்ஏ-க்களை பாமக உறுப்பினா்களாக அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு, பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

தனது தரப்பு எம்எல்ஏ-க்களை பாமக உறுப்பினா்களாக அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு, பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமக சட்டப்பேரவைக் குழுவுக்கு முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் குறித்த கடிதம் பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதை சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு தொடா்ந்து மறுத்து வருகிறாா்.

இது குறித்து அவருக்கு பலமுறை அவருக்கு நினைவூட்டல்கள் செய்யப்பட்டுவிட்டன. சட்டப்பேரவையிலும் இது தொடா்பாக பலமுறை வலியுறுத்தப்பட்டுவிட்டது.

நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டிய பொறுப்பில் இருக்கும் சட்டப்பேரவைத் தலைவா், அரசியல் காரணங்களுக்காக மரபுகளை மதிக்காமல் செயல்படுவது நியாயமல்ல. இந்த விஷயத்தில் பேரவைத் தலைவரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com