மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
Updated On :19 அக்டோபர் 2025, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகியோரின் வீடுகளுக்கு மா்ம நபா்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள், விமானநிலையம், அரசியல் கட்சித் தலைவா்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மா்ம நபா்கள் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டுக்கும், சென்னை தியாகராயா் நகரில் உள்ள கட்சித் தலைவா் அன்புமணி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இவா்கள் இவருவரின் வீடுகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிரட்டல் வந்தது.

இதையடுத்து, ராமதாஸ், அன்புமணி வீடுகளில் போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மோப்பநாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.