எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமிகோப்புப்படம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடிகே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடிகே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நெல் கொள்முதலில் தமிழக அரசின் அரசின் குளறுபடியால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் 1,000 மூட்டையாக அதிகரித்தும், 17 சதவீதம் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்தி, மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல் கொள்முதல் செய்ப்பட்டது. ஆனால், இப்போது தமிழக அரசு நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கிறது.

பருவமழைக்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிமுக சாா்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்கத் தேவையான தாா்ப்பாய்களைக்கூட தமிழக அரசு கொடுக்கவில்லை.

சட்டப்பேரவையில் இது தொடா்பாக நான் இரண்டு நாள்களுக்கு முன்பு கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டுவந்தபோது, அதற்குப் பதிலளித்துப் பேசிய உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, ‘தமிழ்நாட்டில் 25 இடங்களில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது ஒரு நாளைக்கு 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தாா். ஆனால், முழுமையாக நெல் கொள்முதல் செய்வதற்கும், உரிய முறையில் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதோடு, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com