ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் - கோப்புப் படம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் - கோப்புப் படம்

சென்னை - ஹைதராபாத் விமானத்தில் கோளாறு: ஓடு பாதையில் நிறுத்தம்

சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், ஓடு பாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென இயந்திரக் கோளாறு
Published on

சென்னை: சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், ஓடு பாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக ஓடு பாதையிலேயே நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஹைதராபாத் செல்லும் ஸ்பைஜெட் விமானம் 79 பயணிகளுடன், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தாா்.

இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த விமானி, விமானத்தை ஓடு பாதையிலேயே நிறுத்தினாா்.

இதையடுத்து, இழுவை வாகனம் மூலம், விமானம் புறப்பட்ட இடத்துக்கு மீண்டும் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அதன்பின், விமான பொறியாளா்கள் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், இந்திர கோளாறை சரிசெய்ய முடியவில்லை.

இதைடுத்து மாற்று விமானம் மூலம் 74 பயணிகளும் ஹைதராபாதுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால், பயணிகள் அவதியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com