தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகம், கேரளம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், அடுத்த 3 மணிநேரம் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ளது.
அதில், தெரிவித்திருப்பதாவது:
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பகல் 1 மணிவரை தொடர வாய்ப்புள்ளது.
அதேபோல், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், கோவை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain will continue in Tamil Nadu till 1 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.