

சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடும் ஆர்வம் உள்ளவர்கள் போக்குவரத்து காவல்துறையில் இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை போக்குவரத்து காவல்துறையில், மழைகாலத்தில் தன்னார்வலர்களாக இணைய விருப்பம் உள்ளவர்கள் Traffic volunteers GCTP- monsoon 2025 என்ற வாட்ஸ்அப் குழுவில் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் வலுவடைந்து காணப்படுவதால், புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு புயலாக வலுப்பெற்றால் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் பணிக்குத் திரும்பி வருவதால், சென்னை மற்றும் அதன் புறநகர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இத்துடன் மழையும் பெய்து வருவதால், போக்குவரத்து காவல் துறையில் தன்னார்வலர்களாக இணைய விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கனமழை: 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.