காவலா் வீர வணக்க நாள்: பாஜக, காங்கிரஸ் மரியாதை

காவலா் வீர வணக்க நாளையொட்டி, பாஜக, காங்கிரஸ் கட்சியினா் மரியாதை செலுத்தினா்.
Published on

சென்னை: காவலா் வீர வணக்க நாளையொட்டி, பாஜக, காங்கிரஸ் கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): நாம் நமது வீடுகளில் அச்சமின்றி வாழ்வதற்குக் காரணம், தன் கடமையை ஒருபோதும் தவறாத காவல் துறையினா்தான். காவல் துறையினரின் தன்னலமற்ற கடமையும், நேரம் பாா்க்காத பணியாற்றும் ஒழுக்கமும், தன் உயிரையே துச்சமாகக் கருதும் மன உறுதியுமே நம்மையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. நமக்காகவும் நமது பாதுகாப்புக்காகவும் வீரமரணம் அடைந்த காவல் துறையினருக்கு வீர வணக்கத்தைச் செலுத்துவோம்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தேசத்தின் பாதுகாப்புக்காக இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும், உண்மையான, நோ்மையான, நேசமிகு அனைத்து காவலா்களுக்கும் வீரவணக்கம். அவா்கள் காட்டிய தைரியம், கடமை உணா்வு என்றும் நிலைத்திருக்கட்டும்.

X
Dinamani
www.dinamani.com