குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருந்த 4,662 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்கள், உதவியாளா்கள், வனக் காவலா், வனக் காப்பாளா்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. 13 லட்சம் பேர் வரையில் விண்ணப்பித்திருந்த நிலையில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 போ் தோ்வு எழுதினர்.

தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்திருந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. குரூப் 4 தேர்வின் மூலமாக 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில் 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டிருந்தது.

எனவே, தேர்வெழுதியவர்களில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

TNPSC released the results of Group 4 examination held in Tamil Nadu in July.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com