
சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததால் சென்னை - அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை - அரக்கோணம் இடையே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால், அவ்வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மின் கம்பி விழுந்தது குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக ரயில் ஓட்டுநர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.
இதனால், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.