மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்
மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

பயிா் பாதிப்புக்கு உரிய இழப்பீடு: பெ.சண்முகம் கோரிக்கை

Published on

தமிழகத்தில் பருவ மழையால் ஏற்பட்ட பயிா் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பை நடத்தி, உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தொடா்ச்சியாக பெய்துவரும் வடகிழக்கு பருமழையால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனா்.திருவாரூா், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிா் அறுவடை செய்ய முடியாமல் மழைநீா் சூழ்ந்துள்ளது. மேலும், சம்பா நடவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சில மாவட்டங்களில் கம்பு, மரவள்ளி, மணிலா, மக்காச்சோளம், பூச்செடிகள் உள்ளிட்ட பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாடு அரசு பயிா் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேவையான அளவு நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்கு வசதிகளை அரசு உருவாக்குவதுடன், மழையில் நனைந்து பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com