10 நாள்களில் நெல் கொள்முதல் பணிகள் நிறைவு: உதயநிதி

டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளது.
தஞ்சாவூரில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூரில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

அடுத்த 10 நாள்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என தஞ்சையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,

தஞ்சையில் 200ஆக இருந்த கொள்முதல் நிலையங்கள் 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 நாள்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும்.

வழக்கத்துக்கு மாறாக ஒரு வாரத்துக்கு முன்பே கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை.

காவிரி படுகை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூறியது போல நெல் மூட்டைகள் நனையவோ அல்லது முளைக்கவோ இல்லை.

பழனிசாமி கூறியது போன்று செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தொடர் மழை: இடிந்து விழுந்த வேலூர் கோட்டை அகழியின் தடுப்புச்சுவர்!

Summary

Paddy procurement completed in 10 days: Udhayanidhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com