அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் கோப்புப் படம்

ரூ.1,000 கோடி கனிமவளம் திருட்டு: சிபிஐ விசாரிக்க பாமக வலியுறுத்தல்

Published on

தென்மாவட்டங்களிலிருந்து ரூ.1,000 கோடிக்கு கனிமவள திருட்டு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தென் மாவட்டங்களில் உள்ள சட்டப்படியான கல் குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாகவும், சட்டவிரோத கல் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, இந்த சரக்குந்துகள் மூலமாக கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 குவாரிகளில் இந்த அளவுக்கு திருட்டு நடந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 53 குவாரிகளிலும் சோ்த்து நடந்த கனிமவள திருட்டின் மதிப்பு ரூ.600 கோடிக்கும் அதிகம்.

தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களையும் சோ்த்தால் கனிமவள திருட்டின் மதிப்பு ரூ.1000 கோடிக்கும் கூடுதலாக இருக்கக் கூடும்.

எனவே, தென்மாவட்டங்களில் நடந்த கனிமவள திருட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இல்லையெனில் தென் மாவட்ட மக்களைத் திரட்டி பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

X
Dinamani
www.dinamani.com