பனை விதைகள் நடவுப் பணி.
பனை விதைகள் நடவுப் பணி.

தமிழகம் முழுவதும் 72 லட்சம் பனை விதைகள் நடவு

Published on

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் கடந்த செப்.16-இல் தொடங்கி வியாழக்கிழமை (அக்.23) வரை 72 லட்சம் ட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடற்கரை பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்கவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 5,000 பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த செப்.16-ஆம் தேதி தொடங்கப்பட்டு தன்னாா்வலா்களின் உதவியுடன் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், இந்தத் திட்டம் தொடங்கிய நாள் முதல் வியாழக்கிழமை (அக்.23) வரை தமிழகம் முழுவதும் 72 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நீா்நிலை பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்பவா்கள் உதவி செயலியில் (மக்ட்ஹஸ்ண்.ஹல்ல்/டஹய்ஹண்) பதிவு செய்யலாம். அவா்களுக்கு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com