

மதுரை: மதுரை கள்ளழகர் கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை கள்ளழகர் கோயிலில் நடைபெற்று வரும் அனைத்து விதமான புதிய கட்டுமானப் பணிகளுக்கும் மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மதுரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோயிலில் ரூ.50 கோடியில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், புதிய கட்டுமானப் பணிகளால், கோயிலின் தொன்மை பாதிப்பதாகவும், கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதையடுதுது, மனுவை பரிசீலித்த மதுரை அமர்வு, மறு உத்தரவு வரும் வரை புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையில் மதுரை அமர்வு இன்று இடைக்காலத் தடை விதித்து வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இந்த மனுவில், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட கோயில் அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்டோர் நவ.5ஆம் தேதிக்குள் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.