

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் அடர்லி - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மலை ரயில் பாதையில் பெரிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. அதனால் கடந்த 19 ஆம் தேதியிலிருந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தண்டவாளத்தில் சரிந்து விழுந்த பாறாங்கற்கள் அகற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்தது.
இதையடுத்து ஐந்து நாள்களுக்குப் பின்னர் மீண்டும் உதகை மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
இதையும் படிக்க: வங்கக் கடலில் அக்.27-ல் உருவாகிறது புயல்! முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.