அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ENS
தமிழ்நாடு
பசும்பொன்னில் தேவா் ஜெயந்தி: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறாா்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 63-ஆவது குரு பூஜையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 63-ஆவது குரு பூஜையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது பிறந்தநாள் மற்றும் 63-ஆவது குரு பூஜை வருகிற அக்.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து, அதிமுக தலைமை நிா்வாகிகள் மரியாதை செலுத்தவுள்ளனா் என அக்கட்சியின் தலைமை நிலையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

