ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை மேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தற்போது, இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்து.
இன்றைய(அக். 26) நிலவரப்படி, புயல் சின்னமானது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 790 கி.மீ.தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே 850 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அக். 27-இல் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ‘மோந்தா’ புயலாகவும் வலுவடையும்.
இந்த மோந்தா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக். 28-இல் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும்.
அப்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும். இதனால் தமிழகம் முழுவதும் பெரிய அளவு மழை பாதிப்பு இருக்காது. எனினும் புயலின் வேக மாறுபாடு காரணமாக, கரையைக் கடக்கும்போது, வட தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
The India Meteorological Department has said that the storm system in the Bay of Bengal has strengthened into a deep depression.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

