சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை.
சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை
Published on
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதன்படி பிகாரைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்தமான், கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சத்தீஸ்கர், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நவ. 4 முதல் கணக்கெடுப்பு

12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் 10.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நாளை முதல் நவம்பர் 3 வரை படிவங்கள் அச்சடிப்பு, அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். நவம்பர் 4 ஆம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும்.

வரைவுப் பட்டியல் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

Summary

Nationwide SIR DMK alliance parties consult

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com