மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல்!

மோந்தா புயல் தற்போது 15 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மோந்தா புயல்
மோந்தா புயல்
Published on
Updated on
1 min read

மோந்தா புயல் நகரும் வேகம் 10 கி.மீட்டரில் இருந்து தற்போது 15 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது.

மோந்தா புயல் தற்போது ஆந்திரத்தை நோக்கி வரும் நிலையில், மசூலிப்பட்டினத்தில் 93 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது.

ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.

காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 82 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கொண்டுள்ளது.

தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஒடிசா அரசும், ஆந்திர அரசும் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தை பொருத்தவரை இன்று (அக். 28) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Summary

Cyclone Mondha is currently moving at a speed of 15 kmph, up from 10 kmph.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com