

மோந்தா புயல் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்றுநேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று மாலை ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆந்திரம், ஒடிஸா வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் இருந்து ஆந்திரம் மற்றும் வடமாநிலங்களுக்குப் புறப்படும் 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 12842 - சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் - 28.10.2025 அன்று காலை 07.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 28-10-2025 அன்று இரவு 23.30 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் எண் 22870 - சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் - 28-10-2025 அன்று காலை 10.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 23.50 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் எண் 22604 - விழுப்புரம் - கரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் - 28.10.2025 அன்று காலை 11.05 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 28.10.2025 அன்று இரவு 7.00 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் எண் 12840 - சென்னை சென்ட்ரல் - ஹவுரா மெயில் ரயில் - 28.10.2025 அன்று 19.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 22.40 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது
ரயில் எண் 12664 - திருச்சிராப்பள்ளி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் - 28-10-2025 அன்று பகல் 13.35 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், மாலை 17.50 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.