

ஈரோடு: முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் ரூ.66.25 லட்சத்தை ஏமாந்திருக்கிறார்.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, பேஸ்புக் மூலம் குறைந்த தொகைக்கு அதிக வட்டியில் லாபம் தருவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், விளம்பரம் கொடுத்தவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்கள் சொன்ன லிங்கில் கிளிக் செய்து சிறு சிறு தொகையாக இதுவரை ரூ.66.25 லட்சத்தை அனுப்பியிருக்கிறார். முதலில் குறிப்பிட்டத் தொகை வந்ததை நம்பி வேல் முருகன் சிறுக சிறுக பெரியத் தொகையாக அனுப்பியிருக்கிறார். பிறகு, அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போயிருக்கிறது.
பிறகுதான், அதிக வட்டி என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதை வேல்முருகன் அறிந்துள்ளார். வேல் முருகன் அளித்த புகாரில் சைபர் கிரைம் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எனவே, சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிக வட்டி என்று வரும் விளம்பரங்களைப் பார்த்து மக்கள் ஏமாற வேண்டாம், அதிகாரப்பூர்வமான நிதி அமைப்புகளில் மட்டும் முதலீடு செய்யவும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.