

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்ற நிலையில், சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது.
ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (அக்.28) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேசமயம் திருவள்ளூர் மாவட்டத்துக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.