

மோந்தா புயல் எதிரொலியாக சென்னை மற்றும் ஆந்திரம் இடையிலான 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், இன்று காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் நிலையில், இது ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னையிலிருந்து ஆந்திரம் செல்லும் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோந்தா புயல், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையில் இன்றிரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மசூலிப்பட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
புயலின் காரணமாக, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திர கடலோரப் பகுதி வழியாகச் செல்லும் பல ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.